உடல் எடையை இயற்கை முறையில் எப்படி குறைக்கலாம்..?

இந்த நவீன வாழ்க்கையில், உணவு முறை மாற்றத்தால் கண்ட உணவுகளை உண்டு உங்கள் உடலின் எடை மிகவும் அதிகமாகி வருகிறது.BMI எனும் உடற்குறியீட்டு எண் பெரும்பாலான மக்களுக்கு எல்லை மீறியே இருக்கிறது. அதை கட்டுக்குள் வைக்க மக்கள் பல வழிகளில் முயற்சிக்கின்றனர். தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் உடல் எடை குறைப்பில் ஈடுபடுத்துகின்றனர். ஆனால் கஷ்டப்படாமல் எப்படி உடல்எடையைக் குறைக்க முடியும்.

நார்ச்சத்து கொண்ட உணவுப் பொருட்களால், உடலில் கெட்ட கொழுப்பை சேர விடாது தடுக்கும்; இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஆப்பிளை குறிப்பிடலாம்; மேலும் கீரை வகைகள், வாழைத்தண்டு இவற்றை உண்ணலாம்; இவை நார்ச்சத்து நிறைந்தவை..

கொள்ளு
5 கிராம் கொள்ளுடன், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்துக்கொண்டு, இதை இரண்டு தேக்கரண்டி, சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து உண்டு வந்தால் கொழுப்பு விரைவில் கரைந்து விடும்.கொள்ளுப்பயறை நன்கு வேக வைத்து, நன்றாக அரைத்து வடிகட்டி, சிறிதளவு பூண்டு, இஞ்சி, சீரகம் சேர்த்து பானமாக குடிக்கலாம்; இதை ரசம் போல் சாதத்துடன் பிசைந்தும் உண்ணலாம்.

கறிவேப்பிலை
கறிவேப்பிலையுடன் சிறிதளவு புளி, உளுந்து, உப்பு சேர்த்து துவையல் போன்று செய்து உணவுடன் சேர்த்து உண்ணலாம்; மேலும் கறிவேப்பிலையுடன் கொள்ளு-வையும் சேர்த்து நன்கு அரைத்து துவையல் போல் செய்து சாப்பிடலாம்.

மிளகு
வாழைத்தண்டு சாறினில் கருமிளகை 2 நாள்கள் ஊற வைத்து, பின் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்; உணவினை சமைக்கையில் மிளகிற்கு மாற்றாக இப்பொடியை பயன்படுத்தவும்; இது உடலிலுள்ள கெட்ட கொழுப்பினை முழுவதும் கரைந்துவிடும்.

வெங்காயம்
சின்ன வெங்காயத்தை 5 எடுத்துக்கொண்டு, அதனை நல்லெண்ணெயில் வதக்கி, வெங்காயம் நன்கு வெந்ததும் தயிர் அல்லது மோர் சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.

கொடம்புளி
நாட்டு மருந்து அங்காடிகளில் கிடைக்கப்பெறும் கொடம்புளி என்பதனை நாம் வழக்கமாக உபயோகப்படுத்தும் புளிக்கு மாற்றாக பயன்படுத்தினால், உடல் எடை குறைப்பில் நல்ல பலன் கிடைக்கும்.