உலகின் முதன்முறையாக அரிய பால்வினை நோயைப் பெற்ற பிரித்தானியர்!

ஆண்டிபயாட்டிக்குகள் என்று அழைக்கப்படும் மருந்துகளுக்கு அடங்காத ஒரு வகை நோய்க்கிருமியால் உண்டாக்கப்படும் அரிய பால்வினை நோய்த்தொற்று ஒரு பிரித்தானியருக்கு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது மருத்துவ உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மோசமான பால்வினை நோய்களில் ஒன்று Gonorrhoea. தவறான பாலுறவுப் பழக்கங்கள் கொண்டவர்களை இந்நோய் தாக்கும்.

பொதுவாக Azithromycin மற்றும் Ceftriaxone என்னும் இரு ஆண்டிபயாட்டிக்குகள் இந்த நோயை குணமாக்குவதற்கு பயன்படுத்தப்படும்.

ஆனால் இந்த மனிதருக்கு ஏற்பட்டுள்ள நோய் இந்த இரண்டு மருந்துகளாலும் குணமாக்கப்பட இயலாததாக உள்ளது.

அதனால் மருத்துவர்கள் இந்த நோயை super-gonorrhoea என்று அழைக்கிறார்கள். ஒரு மருத்துவ ஆய்வு இவ்வகை நோய் ஏற்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று தெரிவித்துள்ளது.

குணமாக்கப்படாவிட்டால் ஆண்மை இழப்பு போன்ற பிரச்சினைகள் உட்பட பல மோசமான பக்க விளைவுகளை இந்நோய் ஏற்படுத்தும்.

ஒரு வேளை எந்த மருந்தாலுமே இந்த நோயை குணமாக்க இயலாமல் போகலாம் என்னும் விடயமே மருத்துவ உலகிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு சென்றிருந்த திருமணமான அந்த மனிதர் அங்குள்ள ஒரு விலைமாதுடன் தகாத பாலுறவு கொண்டதன் விளைவாகவே இந்நோய் ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் வெவ்வேறு ஆண்டிபயாட்டிக்குகள் மூலம் அந்த மனிதருக்கு சிகிச்சைகள் அளித்து எந்த மருந்து வேலை செய்கிறது என்பதைக் கண்காணித்து வருகிறார்கள்.

தகாத பாலுறவுப் பழக்கம் உடையோருக்கு இந்த செய்தி ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது எனலாம்.