ஆண்களை கடத்தி கட்டாய திருமணம்!!

தங்களுடைய மகள்களை திருமணம் செய்து கொடுப்பதற்காக மணமகன்களை கடத்தும் எல்லைக்கே சில குடும்பங்கள் செல்கின்றன. இதற்கு மகள்களின் சம்மதம் பெறப்படுவதில்லை.

பெற்றோர் உங்களை எப்படியாவது திருமணம் செய்து கொடுக்க எண்ணி, ஓர் ஆண் மகனை கடத்தி திருமணம் செய்து வைக்கப்படும் இளம் பெண்ணாக உங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு உங்களுடைய சம்மதத்தையோ, அந்த ஆணின் சம்மதத்தையோ கேட்காமல் செய்யப்படுவதுதான் “பாக்டோவா திருமணம்”.

’BBCShe’ பணித்திட்டத்தின் போது பாட்னாவில் நடத்திய உரையாடலில், இத்தகைய பாக்டோவா திருமண சம்பவத்தை பற்றி பெண்கள் கூறியபோது, நான் நம்பவில்லை.

இப்படிப்பட்ட ஒரு திருமணத்திற்கு பெண் ஒருவர் எவ்வாறு சம்மதிப்பார்?

அந்த ஆண் அவளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால் என்ன நடக்கும்?

மணமகன் கோபத்தோடு மணமகளை வீட்டிற்கு அழைத்து வந்தால், அவள் எவ்வாறு திருமண வாழ்க்கை நடத்துவார்?

2017ம் ஆண்டு பிகார் மாநிலத்தில் 3,500 ஆள்கடத்தல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல்துறை கூறுகின்றது.

இதில் அதிகமானவை பிகாரின் வட பகுதியில் நடைபெற்றவையாகும்.

எனவே, பாட்னாவின் சாஹார்சா மாவட்டத்திற்கு சென்றேன். அங்குள்ள சிம்ரி கிராமத்தில் மஹாராணியையும், அவருடைய கணவர் பர்வீன் குமாரையும் சந்திப்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.

_100557493_maharanideviparveenkumar  பெண்களின் குடும்பத்தால் வரதட்சனை கொடுக்க முடியவில்லை:  ஆண்களை   கடத்தி கட்டாய திருமணம்!! 100557493 maharanideviparveenkumarபர்வீனும், மஹாராணியும் இப்போது இரட்டை மகன்களுக்கு பெற்றோர்.

அவருடைய குடும்பத்தினர் பர்வீனை கடத்தி, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தபோது, மஹாராணிக்கு 15 வயதுதான்.

“எனக்கு திருமணம் பற்றிய எந்த சிந்தனையும் இல்லை. யாரும் என்னுடைய சம்மதத்தை கேட்கவில்லை” என்று மஹாராணி என்னிடம் தெரிவித்தார்.

ஏன் என்று நான் கேட்ட கேள்விக்கு, “எங்கள் அம்மா, அப்பா விரும்புவதுதான் நடைபெறும். திருமணம் பற்றி முடிவெடுப்பதில் மகள்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது” என்று அவர் கூறினார்.

அந்த முடிவின் விளைவு என்னவென்றால், திருமணம் நடைபெற்றது. ஆனால், 3 ஆண்டுகளாக பர்வீன் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லவில்லை.

பர்வீன் இது பற்றி என்னிடம் கூறுகையில், “எனக்கு நடந்தது பற்றி நான் பதற்றமும், கோபமும் அடைந்தேன். எனவே, நான் அவளை அவளுடைய இடத்திலேயே விட்டுவிட்டு வந்து என்னுடைய வீட்டில் தனியாக தங்கியிருந்தேன்” என்றார்.

சிம்ரி கிராமத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டோலா கிராமத்தில் 17 வயதான ரோஷானும் இதே மாதிரியான கோபத்துடன் உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் ஏமாற்றி இன்னொரு கிராமத்துக்கு போக செய்துள்ளார்.

ஓர் அறையில் அடைத்து வைத்து அடித்து, துப்பாக்கி முனையில் தான் மிரட்டப்பட்டதாகக ரோஷான் குறிப்பிடுகிறார்.

அவரைவிட வயது அதிகமான பெண்ணோடு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணின் குடும்பத்தில் இருந்து வெளியே வந்தவுடன், காவல் நிலையத்துக்கு சென்ற அவர், குழந்தை திருமண வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

“பின்னர் பஞ்சாயத்து சமரசம் செய்ய முயற்சித்தது. நான் ஏற்கெனவே குரல்வளை நெரிக்கப்பட்டதுபோல உணர்கிறேன். நீங்கள் என்னை கொன்றாலும், இந்த திருமணத்தை ஏற்கப்போவதில்லை என கூறிவிட்டேன்” என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

ஆனால், அந்த பெண்ணுக்கு என்ன ஆகும்?

_100557495_priyankakumari  பெண்களின் குடும்பத்தால் வரதட்சனை கொடுக்க முடியவில்லை:  ஆண்களை   கடத்தி கட்டாய திருமணம்!! 100557495 priyankakumari

“எனக்கு அந்த பெண்ணை தெரியாது. நான் அவரோடு எந்த உறவையும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவளை பற்றி எனக்கு கவலையில்லை. என்னுடைய வாழ்க்கையில் மேலும் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

இவ்வளவு கசப்புணர்வோடு தொடங்குகின்ற ஓர் உறவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

பாக்டோவா திருமணத்தின் உண்மை நிலை பற்றி குடும்பங்கள் தெரிந்திருந்தாலும், இந்தப் புதைகுழியில் அவர்களின் மகள்களை ஏன் தள்ளுகிறார்கள்?

பிகாரில் இருக்கின்ற நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் இந்த நிலைமை நிலவுவதாக பாட்னா பல்கலைக்கழகத்தில் பெண்களின் ஆய்வு மையங்களை தொடங்கிய வரலாற்று பேராசிரியர் பாரதி குமார் நம்புகிறார்.

“உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் அதிக சமூக அழுத்தங்கள் காணப்படுகின்றன. மிக விரைவாக அதே சாதியை சேர்ந்தவருக்கு தங்களின் மகள்களை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மிகவும் முனைப்போடு செயல்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

திருமணம், குழந்தைகள் மற்றும் குடும்பத்தை சுற்றியே முக்கியமாக பெண்களின் வாழ்வு இருந்து வரும் கிரமங்களில் இந்த பாக்டோவா திருமண சம்பவங்கள் காணப்படுகின்றன.

ரோஷானின் ஒன்றுவிட்ட சகோதரிக்கு 15 வயதே ஆனாலும் ஆழமான எண்ணங்களை கொண்டுள்ளார்.

தன்னுடைய சகோதரருக்கு நடந்தது பற்றி அவர் மிகவும் கோபம் அடைந்துள்ளார்.

ஆனால், “நானும் ஒரு பெண்தான். மணப்பெண் கணவரை கடத்தி கொண்டுவர கேட்டிருக்கமாட்டாள். இது அவளுடைய பெற்றோரின் தவறு” என்கிறார்.

“ஒருமுறை கூட சந்திக்காமல் ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பெற்றோர் எண்ணுகிறார்கள். அதன் விளைவாக அந்த ஆணுக்கு மகிழ்ச்சியில்லை. பெண்ணின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

மது தடை இருப்பதை போல, பிகாரை ஆளும் முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசு வரதட்சனை கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்று கொள்கையை கொண்டுள்ளது.

ஆனால், அதனுடைய பாதிப்பு ஒன்றும் பிரியங்காவின் கிராமத்தில் இல்லை. பெண்களின் குடும்பத்தால் வரதட்சனை கொடுக்க முடியவில்லை என்பதுதான் கட்டாய திருமணங்களுக்கு மிக முக்கிய காரணம் என்று அவர் கூறுகிறார்.

திருமணத்துக்காக கடத்தப்படும் ஆண்கள்; பரிதவிக்கும் குடும்பங்கள்

“யாரால் வரதட்சனை கொடுக்க முடியவில்லையோ அவர்கள் ஆண்களை கடத்துகிறார்கள். இல்லாவிட்டால், திருமணங்கள் வரதட்சனை கொடுத்துதான் நடைபெறுகின்றன” என்று அவர் கூறுகிறார்.

பாக்டோவா திருமணத்திலும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், தன்னுடைய மனைவியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடும் ஆண்கள் வரதட்சனை வழங்குவது மூலமே சமாதானப் படுத்தப்படுகின்றனர்.

வரதட்சனையும், திருமணமும் தீயதொரு சுழற்சிபோல ஒழிப்பதற்கு மிக கடுமையானவைகளாக தோன்றுகின்றன.

தங்களுடைய திருமணம் நடைபெற்று 3 ஆண்டுகளுக்கு பின்னர், பர்வீன் குமார் அவருடைய மனைவியை ஏற்றுக்கொண்டார்.

பர்வீன் கூற்றுப்படி, அவரது மற்றும் அவருடைய குடும்பத்தின் கௌரவம் ஆபத்திற்குள்ளாகியுள்ளது.

“என்னை பற்றி மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால், வேறு ஒரு மரியாதைக்குரிய குடும்பம் அதன் பெண்ணொருவர் என்னுடன் நடத்துகின்ற வாழ்க்கையை நம்பாது” என்று அவர் தெரிவிக்கிறார்.

எனவேதான், இந்த மனைவியை ஏற்றுக்கொண்டு புதிய தொடக்கத்தை உருவாக்க பாவின் முடிவு செய்துள்ளார்.

மஹாராணிக்கு ஒரு முடிவு எடுக்கக்கூடிய சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லை.

“என்ன நடந்தது என்பதை மறந்துவிடு, பலர் இதைபோல நினைத்திருக்கிறார்கள். அதை பற்றி சிந்திக்காதே. இப்போது இருக்கின்ற வாழ்க்கையை வாழ்ந்துவிடு” என்று அவரது தோழியர் கூறியதாக மஹாராணி தெரிவிக்கிறார்,

பர்வீனும், மஹாராணியும் இப்போது இரட்டை மகன்களுக்கு பெற்றோர்.

அவள் நன்றாக இருக்கிறாரா? என்று மஹாராணியிடம் கேட்டபோது, அவளது கண்கள் குளமாகின. அவளுடைய மாமாவும், மாமியும் அவரை நன்றாக கவனித்துக்கொள்வதாக மட்டும் தெரிவித்தார்.

“கட்டாயத்தால் செய்து வைக்கப்பட்ட திருமணம்போல இதனை உணர முடியவில்லை” என்கிறார் அவர்.