பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சுதத் சந்திரசேகர திடீரென பதவி விலகியுள்ளார்.
1985ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளராக பணி புரிந்திருந்த நிலையில் இன்றைய தினம் அவர் பதவி விலகியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நீண்டு பணிபுரிய முடியாது எனவும், அவர் பக்கச்சார்பாக செயற்படுகின்றார் எனத் தெரிவித்தும் 7 பக்கங்களைக் கொண்ட விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து விட்டு அவர் பதவி விலகியுள்ளார்.
மிக நீண்ட காலமாக பிரதமரிடத்தில் பிரத்தியேக செயலாளராக பணி புரிந்த இவர், திடீரென பதவி விலகியுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமகாலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது பலரும் அதிருப்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், இந்த சம்பவம் தென்னிலங்கை அரசியலை ஒரு கணம் ஆட்டம் காண வைத்துள்ளது.






