சர்க்கஸ் அரங்கத்தையே அதிர வைத்த நிகழ்வு……

சர்க்கஸ் அரங்கில் பல இலட்சம் மக்கள் முன்னிலையில் கயிறு சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கை சறுக்கலால் தவறி விழுந்த யான் அர்னாட்(38) என்பவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே உயிரிழந்தார்.அவர் சாகசத்தை நிகழ்த்தும்போது கயிற்றின் பிடி சறுக்கியதால் 12 அடி உயரத்தில் இருந்து விழுந்த அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த சம்பவத்தை பற்றி ஊசைஙரந னர ளுழடநடைஎன்னும் சர்க்கஸ் நிறுவனம் கூறியது, யான் அர்னாட் 15 வருடமாக இந்த சாகசத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென நிகழ்ந்த இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் உடனே மருத்துமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலே உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர்.மேலும், இந்த நிகழ்வால் 2 நிகழ்ச்சிகள் ரத்து செய்யபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்நிறுவனத்தின் தலைவர் பேசியபோது யானின் குடும்பத்தற்கு மிக பக்கபலமாக இருந்து ஆதரவு தரவுள்ளதாகவும், மேலும் சக ஊழியர்களையும் கவனத்தில் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

யான் அர்னாட் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில் ‘நாங்கள் இருவரும் நிறைய உழைப்பை போட்டு கடின பயிற்சியை மேற்கொண்டதற்கு இன்று இரவு நல்ல பலன் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.