கூந்தல் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் காரணிகள் என்று பார்த்தால் அது ஷாம்பு, நீர், பொடுகு, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை கூறலாம்.
கூந்தல் செல்களை தூண்டப்படும் போது ரத்த ஓட்டம் அங்கே அதிகரித்து புதிய முடிகள் முளைக்கத் துவங்கும். அவ்வகையில் இயற்கையான பொருட்கள் சில கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
வெங்காயம்
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து தலையில் தடவி 15 நிமிடம் கழித்து அலச வேண்டும். இதனால் ஒரே வாரத்தில் முடி உதிர்தல்குறைவதை காணலாம்.

தேங்காய் பால்
1 கப் தேங்காய் பாலுடன் 1/2 மூடி லுமிச்சை சாறு கலந்து அதை தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும்.

முட்டை
முட்டை முழுவதையும் நன்றாக நுரைக்கும்படி அடித்து அதில் ஆலில் ஆயில் மற்றும் தேன் கலந்து நன்கு கலக்கி, அதை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து அலசி வர வேண்டும். அதனால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வெந்தயம்
வெந்தயம் மற்றும் சீரகத்தையும் ஊற வைத்து அரைத்து அதனுடன் தயிர் கலந்து தலையில் தேய்த்து வந்தால் நீளமான, அடர்த்தியான கூந்தல் வளரும். இதை வாரம் இருமுறை செய்தால் போதும்.

நெல்லிக்காய்
1/2 கப் நெல்லிக்காய் சாற்றை எடுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து மிதமான தீயில் காய்ச்சிய பின் அதில் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் கலந்து தலையில் தேய்க்க வேண்டும்.
அதன் பின் 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.







