சுகாதார அமைச்சரைக் கைது செய்யுங்கள்! கொதிக்கும் பெற்றோர்…

சுகாதார அமைச்சர் மற்றும் அந்த அமைச்சின் செயலாளரும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பெற்றோர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் கெமுனு விஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்தது போலியான செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.