ஒவ்வொரு பயணத்துக்கு முன்னரும் என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும், எதையெல்லாம் சாப்பிட கொண்டு போகலாம் என்பதையெல்லாம் சரியாக திட்டமிடுவோம்.
ஆனால் முக்கியமான ஒரு விடயத்தைப் பற்றி சுத்தமாக கவனத்தில் கொள்ள மாட்டோம். ஆம், விமானப் பயணத்துக்கு முன்னால் எந்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்பதைத் தான்.
வறுக்கப்பட்ட உணவு வகைகள்:
விமான நிலையத்தில் அவசரப் பசிக்கு சாப்பிடக் கிடைக்கும் உடனடி உணவான பர்கர் அல்லது ஃபிங்கர் சிப்ஸை வாங்கி சாப்பிடாதீர்கள்.
வறுக்கப்பட்ட உணவுகளில் சோடியம் உள்ளது. மேலும் அதில் உள்ள எண்ணெய் மற்றும் கொழிப்புச் சத்து உங்களுக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடலாம்.
ப்ரொகோலி:
முட்டை கோஸ், ப்ரொகோலி போன்ற பச்சைக் காய்கறிகளை விமானப் பயணத்தின் முன்னர் தவிர்த்துவிடுங்கள்.
காரணம் இவை வாயு பிர்ச்னையை விளைவித்து விடலாம். வேர்க்கடலை சாப்பிடுவதையும் தவிருங்கள்.
செயற்கை குளிர்பானம்:
பயணம் செய்யும் போது பலருக்கு செயற்கை குளிர்பானம் குடிக்கும் பழக்கம் உள்ளது. அது விமானப் பயணத்துக்கு முன் தவிர்ப்பது நலம். காரணம் அது ஏப்பத்தை ஏற்படுத்தி வாயுத் தொல்லைக்கும் வழி வகுக்கும்.
ஆப்பிள்:
ஆப்பிள் உடல் நலத்துக்கு நல்லதுதான். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளது என்பதும் உண்மைதான். ஆனால் அது ஜீரணமாக நேரமாகும். ஆதலாம் விமானம் ஏறும் முன் ஆப்பிள் வேண்டாமே.
பீன்ஸ்:
பீன்ஸில் புரதச் சத்து அதிகமுள்ளது. இது வாயுத் தொல்லையை ஏற்படுத்தலாம்.
காபி:
காபியை குடித்துவிட்டு விமானத்தில் ஏறினால் சிலருக்கு தலைச் சுற்றல் வாந்தி வரலாம். கஃபைன் சில சமயம் எதிர்பாராத விதமாக ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.






