பிரதமரின் செயலாளர் என்று கூறி நாட்டில் பல்வேறு பொலிஸ் நிலையங்களை தொடர்பு கொண்ட நபரை கைது செய்ய பொலிஸார் தேடி வருகின்றனர்.
தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட ஒருவரை கைது செய்ய விசாரணைகளை நடத்துமாறு பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இன்று அறிவித்துள்ளார்.
குறித்த நபர் பல பொலிஸ் நிலையங்களுடன் தொடர்புக்கொண்டு அழுத்தங்களை கொடுத்துள்ளார். இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை நடத்துமாறு அவர் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.






