30-ஆன பெண்களா நீங்கள்? இந்த விடயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் தங்களின் 30 வயதினை கடந்து விட்டாலே வேலைச்சுமைகள், குழந்தைகள், குடும்பம் என்று பல்வேறு பொறுப்புகளில் இறங்கி விடுவார்கள்.

அதனால் முப்பது வயதினை கடந்த பெண்கள் பலரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை.

ஆனால் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, சில ஆரோக்கிய விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

  • 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, ஒரு நாளைக்கு 1600-1800 கலோரிகள் தேவை. வயது அதிகமாகும் போது, இந்த அளவில் ஆண்டுக்கு 7 கலோரிகள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • உணவு ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று, பி.எம்.ஐ (BMI) அளவைத் தெரிந்துக் கொண்டு, அதற்கேற்ற உணவுப் பட்டியலைத் தயாரித்து சாப்பிட வேண்டும்.
  • பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். தினசரி உடற்பயிற்சியை செய்து வந்தால் உடல் எடை கூடுதல், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
  • 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். அதிலும் குறிப்பாக மார்பகப் பரிசோதனை செய்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
  • நடுத்தர வயதுப் பெண்கள், உணவு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று தகுந்த டயட் உணவுகளைச் சாப்பிடத் தொடங்கினால் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கலாம்.
  • முப்பது வயதிற்கு மேலான பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் எலும்பின் அடர்த்தி குறைய வாய்ப்புண்டு. அதனால் முதுகுவலி ஏற்படும். இதனை தடுக்க உணவில் கீரைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இரவுநேரத்தில் போதிய அளவுக்குத் தூக்கம் இருந்தாலே ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படாது. ஆனாலும் ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்கின்றதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
  • காலை எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதோடு தாகம் இருந்தாலோ, இல்லாவிட்டாலோ குறிப்பிட்ட கால இடைவெளியில் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
  • 30 வயதைக் கடக்கும் பெண்களின் தோல் செல்களின் உற்பத்தி மந்தமாகி விடுவதால், தோலில் வறண்டு போவது, சுருங்குவது போன்ற மாற்றங்கள் நிகழும். எனவே வருடத்திற்கு ஒரு முறை தோல் நோய் நிபுணரிடம் சோதனை செய்து கொள்ள வேண்டும்.