உலகின் நான்காவது ராணுவ சக்தியாக மாறியுள்ள இந்தியா!

இந்தியா உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக மாறியுள்ளது என `குளோபல் பயர்பவர்’ (GFP) குறியீட்டில் தெரியவந்துள்ளது. ஆட்கள் எண்ணிக்கை மற்றும் ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் மேலாக உள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா இந்தியாவிற்கு மேலே உள்ளது.

பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான (GFP) 2017ஆம் ஆண்டுக்கான 133 நாடுகளின் ராணுவ வலிமைகளை அடிப்படையாக கொண்டு தரவரிசைகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது அணு சக்திகளை கணக்கில் எடுக்கவில்லை.

13வது இடத்தில் பாகிஸ்தான்

இந்த தரவரிசையில் பாகிஸ்தான் 13வது இடத்தில் உள்ளது என பிபிசி செய்தியாளர் ஷகீல் அக்தர் தெரிவிக்கிறார். பாகிஸ்தான் வேகமாகத் தனது ராணுவத்தை வலிமைப்படுத்தியுள்ளது.

100366155_2622ecad-fa45-4532-9113-fa6ea2980cbf  உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக மாறியுள்ள இந்தியா! 100366155 2622ecad fa45 4532 9113 fa6ea2980cbf

அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட் 587 பில்லியன் டாலராகவும், சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 161 பில்லியன் டாலராகவும் உள்ளது.

தரவரிசையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்குப் பின்பு சீனா இருந்தாலும், இந்த இடைவெளி வேகமாக குறைந்து வருகிறது.

பாதுகாப்பு துறைக்கு இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம் செலவழிக்கும் சீனா, இரண்டாம் இடத்திற்கு முன்னேற முயல்கிறது.

போர் விமானங்கள் உட்பட, 13 ஆயிரம் ராணுவ விமானங்களை அமெரிக்கா வைத்துள்ளதாக ’குளோபல் பயர்பவர்’ கூறுகிறது.

சீனா 3000 போர் விமானங்களை வைத்துள்ளது. இந்தியாவிடம் 2000த்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன.

13 லட்ச ராணுவ துருப்புகளையும், இதை தவிர 8 லட்சம் ரிசர்வ் படைகளையும் இந்தியா வைத்துள்ளது.

இந்தியாவிடம் 4000 டாங்குகளும் உள்ளன. இந்திய கடற்படையிடம் மூன்று விமானம் தாங்கிய போர் கப்பல் உள்ளது. குறைந்தது ஒரு போர் கப்பல், கடல் பரப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

100366156_f0a7fc3b-6a01-4f2c-ae81-485aed4670e2  உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக மாறியுள்ள இந்தியா! 100366156 f0a7fc3b 6a01 4f2c ae81 485aed4670e2

பாகிஸ்தானிடம் போர் கப்பல் இல்லை

பாகிஸ்தானின், பாதுகாப்பு பட்ஜெட் 7 பில்லியன் டாலர்களாக உள்ளது. 6 லட்சத்து 37 ஆயிரம் ராணுவ துருப்புகளையும், 3 லட்சம் ரிசர்வ் படைகளையும் பாகிஸ்தான் வைத்துள்ளது.

கிட்டதட்ட 1000 போர் விமானங்களையும், 3000 டாங்குகளையும் வைத்துள்ளது. பாகிஸ்தானிடம் போர் கப்பலே இல்லை.

இந்த பட்டியலில், 8.1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேல் 9-ம் இடத்தில் உள்ளது.