உன்னைத்தேடி, திருட்டுப்பயலே படங்களில் நடித்த மாளவிகா தற்போது தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் கார்த்திக், அஜித், முரளி போன்ற பிரபல நாயகர்களுடன் நடித்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம் பெற்ற ‘வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்…’ பாடல் இவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கியது. பின்னர் ‘திருட்டுப்பயலே’ உள்பட பல படங்களில் நடித்தார்.
2007-ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பிறகும் நடிப்பேன் என்றார். பின்னர் ஒரு சில படங்களில் தலைகாட்டினார்.
மாளவிகா பற்றி நீண்ட நாட்களாக எந்த தகவலும் இல்லை. தற்போது 38 வயதாகும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். நடிப்பதை நிறுத்தி விட்டார்.
சமீபத்தில் மாளவிகா தனது கணவர், குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் 4 பேரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும். ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.








