வங்கி மோசடியில் சிக்கிய தமிழ் நடிகை!

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் லோன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்வது தற்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வங்கி ஒன்றில் ரூ.36 லட்சம் மோசடி செய்துவிட்டு லண்டனில் செட்டிலான நடிகை ஒருவர் மிது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடல்பூக்கள், சமுத்திரம், ஈரம் போன்ற தமிழ் படங்கள் உள்பட ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தவர் நடிகை சிந்துமேனன்.

இவர் இவருடைய சகோதர் ஒருவருக்கு ரூ.36 லட்சம் வங்கி லோன் வாங்க தனது சொத்துக்களை கியாரண்டி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இவர் கொடுத்த சொத்துக்களின் ஆவணங்கள் போலி என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிந்துமேனனின் சகோதரரையும் இன்னொரு பெண்ணையும் பொலிசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் லண்டனை சேர்ந்த பிரபு என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்த சிந்துமேனன், தற்போது லண்டனிலேயே செட்டிலாகிவிட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்வது குறித்து பொலிசார் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.