முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். பெரும்பாலும் பலர் தங்களது முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் வீட்டிலேயே தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தான் நினைப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு எந்தெந்த பொருளை எப்படி பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பது பற்றி சுத்தமாக தெரியாது. நீங்கள் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய ஒரு பொருள் அரிசி.
ஆனால், இந்த அரிசியை அழகிற்காக பலவிதமாக பயன்படுத்துவதால் கிடைக்கும் ஆச்சரியமூட்டும் அழகு பற்றி உங்களுக்கு தெரியுமா? அரிசியை ஒரு சில பொருட்களுடன் கலந்து பயன்படுத்தும் போது உங்களது முகம் மிகவும் அழகாக மாறும்.
அரிசியை எந்தெந்த பொருட்களுடன் கலந்து எப்படி பயன்படுத்துவது என்று தெரியாதவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. அரிசி மாவு, பால்
சருமம் வெயிலினால் கருமையாகி இருக்கும். இந்த கருமையை போக்கி உங்களது உண்மையான நிறத்தை வெளிக் கொண்டு வர. பாலில் அரிசி மாவை கலந்து அதனை முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.
இதனை அப்படியே 15 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவினால் முகம் இழந்த நிறத்தை ஒரே மாதத்தில் பெரும். அரிசியை கழுவிய தண்ணீரில் முகத்தை கழுவி வந்தாலும் இதே போன்ற பலனை பெறலாம்.
2. கருவளையங்கள்
கண்களுக்கு அடியில் கருவளையங்கள் இருந்தால், நீங்கள் மிகவும் சோர்வாகவும், ஒரு நோயாளியை போலவும் தோன்றுவீர்கள்.
அதற்கு வாழைப்பழம், விளக்கெண்ணை, அரிசி மாவு போன்றவற்றை ஒன்றாக கலந்து கருவளையங்களுக்கு மேல் அல்லது கருமையாக உள்ள சருமத்தின் மீது தடவலாம்.
இது உங்களது கருமையான இடங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரும். உங்களை இளமையாக காட்டும் தன்மையும் இதற்கு உண்டு.
3. தலைமுடிக்கு
அரிசி மாவு மற்றும் முல்தாணி மட்டியை சம அளவு எடுத்து கொண்டு, அதை நன்றாக மிக்ஸ் செய்து, தலைமுடிக்கு பேக் போல போட வேண்டும். இதனால் தலைமுடி வலிமையாக காணப்படும்.
4. கருமை போக
அரிசி மாவுடன் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து முகத்திற்கு பேக் போட வேண்டும். இது நன்றாக காயும் வரை விட்டுவிட்டு பின்னர் முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும்.
இதனால் முகம் பளிச்சிடும். வெயிலினால் கருப்பான கலையிழந்த முகத்திற்கு அழகு கூடும்
5. மஞ்சளுடன்…
2 ஸ்பூன் அரிசி மாவு, 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 2 ஸ்பூன் பால் மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல செய்து, முகம் மற்றும் கழுத்து பகுதிகள் இரண்டிலும் தடவி 10 நிமிடங்கள் கழித்து ஸ்கிரப் போல மசாஜ் செய்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே முகம் பட்டு போல மாறிவிடும்.







