மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரொருவர் மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை நள்ளிரவு வேளையில் இவர் மோட்டார் சைக்கிளில் தனியாக முஹாஜிரீன் கிராமத்திலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போது, இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்த மின்மாற்றிக் கம்பத்துடன் மோதியுள்ளது.
காயமடைந்தவர் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி இன்று வியாழக்கிழமை பகல் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






