நம் உடலில் போதுமான அளவு ரத்தம் இல்லாமல் இருந்தால், பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும்.
அப்பிரச்சனைகளை முற்றிலும் தடுத்து ரத்த உற்பத்தியை அதிகரிக்க அன்னாச்சிபழம் பெரிதும் உதவுகிறது.
அன்னாச்சிப் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்?
நன்கு பழுத்த அன்னாசி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பின் அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி, அதனை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.
பின் உலர்ந்த அன்னாசி பழத்தின் வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடி வைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின் தினம்தோறும் உறங்குவதற்கும் 1 மணிநேரம் முன்பாக, ஒரு டம்ளர் பாலில் 10 துண்டுகள் அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும்.
ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்ட பின் அந்த பாலை குடிக்க வேண்டும்.
நன்மைகள்
- இரண்டு மாதம் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் ரத்தம் உற்பத்தியாகும்.
- உடல் சக்தி பெறும். பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் நோய்களும் முற்றிலும் நீங்கும்.
- நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.