பொடுகு அதிகம் இருக்கா? இதை செய்திடுங்கள்

தலையின் மேல்புறத்தில் உள்ள சருமத்தில் இறந்துபோன உயிரணுக்களின் வெளிப்பாட்டினையே பொடுகு என்கிறோம்.

அதிக வியர்வை ஏற்படும் போது வியர்வையில் உள்ள உப்பு தலையில் தங்கி பொடுகை உண்டாக்குகிறது.

இதனால் தலையில் அரிப்பு அதிகமாக ஏற்படும், இந்த பொடுகு தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட சில இயற்கை வழிகள் உள்ளது.

  • பேக்கிங் சோடாவை எடுத்து தலையில் தேய்த்து தலைமுடியை வெறும் தண்ணீரில் அலச வேண்டும். இதை 2 வாரம் தொடர்ந்து செய்து வந்தாலே போதும்.
  • 4 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை தலையின் மண்டை ஓட்டில் படும்படி தேய்த்து 1 மணி நேரம் கழித்து அலச வேண்டும். இதை 3 நாளைக்கு ஒருமுறை செய்தால் போதும்.
  • தரமான உப்பை அரைத்து முடியின் கால்களில் படும்படி அழுந்த தேய்த்து பின் ஷாம்பு போட்டு குளித்தால் பொடுகு போய்விடும்.
  • 2 ஸ்பூன் எலுமிச்சை பழத்தின் சாற்றை தலையில் நன்றாக தடவி, வெறும் நீரில் முடியை அலச வேண்டும். அதுவும் எலுமிச்சை சாற்றுக்கு சம அளவில் நீரை கலந்துக் கொள்ள வேண்டும்.
  • 2 ஆஸ்பிரின் மாத்திரைகளை பொடித்து அதை ஷாம்பூவுடன் கலந்து தலையில் தேய்த்து 2 நிமிடம் கழித்து அலச வேண்டும்.