தமிழகத்தின் சென்னையில் காதலனை ஏவிவிட்டு, முன்னாள் காதலனை கல்லூரி மாணவி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பஞ்சாயத்து காலனியை சேர்ந்த கோபியும், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான கீர்த்திகாவும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், மதுபோதைக்கு அடிமையான கீர்த்திகாவிற்கு, நிறைய ஆண் நண்பர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமது வீட்டருகே சென்ற கீர்த்திகாவை, கோபி கேலி செய்துள்ளார். இதுகுறித்து, கீர்த்திகா தற்போதைய காதலனான சரத்குமாரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நண்பர்கள் இரண்டு பேருடன் கோபியின் வீட்டுக்கு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளார்.
அவர்களை கண்டதும் தப்பியோடிய கோபி மீது, சரத்குமார் வெடிகுண்டை வீசியுள்ளார். எனினும், அங்குள்ள புதர் மறைவில் மறைந்து, கோபி உயிர் தப்பினார்.
இந்த பிரச்னை தொடர்பாக, கோபியை சங்கர் நகர் பொலிசார், கைது செய்துள்ளனர். எனினும், பிரச்னைக்கு காரணமான கீர்த்திகா, வெடிகுண்டு வீசிய சரத்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






