யாழ்ப்­பா­ணத்­தில் ஆபத்தான நோ­ய்..

யாழ்ப்­பா­ணத்­தில் புகை­யி­லை­யைப் பயன்­ப­டுத்­து­வ­தால் வாய்ப் புற்று நோயா­ளர்­கள் அதி­க­ள­வில் இனங்­கா­ணப்­ப­டு­கின்­ற­னர்.

புற்­று­நோ­யைக் கட்­டுப்­ப­டுத்­தவே இறுக்­க­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றோம். இவ்­வாறு வடக்கு மாகாண சுகா­தா­ரப் பணிப்­பா­ளர் மருத்­து­வர் ஆ.கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் இணைத் தலை­வர்­க­ளான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராசா, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது.

இந்­தக் கூட்­டத்­தில் புகை­யிலை விற்­ப­னை­யா­ளர்­க­ளின் பிரச்­சினை தொடர்­பா­கப் பேசப்­பட்­டது. அதன்­போது பணிப்­பா­ளர் மேலும் தெரி­வித்­தா­வது:

யாழ்ப்­ப­ணத்­தில் பொதுச் சந்­தை­க­ளி­லும், கடை­க­ளி­லும் மெல்­லு­வ­தற்கு புகை­யி­லையை விற்­பனை செய்­ப­வர்­க­ளுக்கு எதி­ரா­கச் சட்ட நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றோம்.

புகை­யி­லையை புகைப்­ப­வர்­களை விட வாயில் மெல்­ப­வர்­க­ளுக்கே புற்று நோயின் தாக்­கம் அதி­க­ள­வில் ஏற்­ப­டு­கின்­றது.

நாம் மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் சிறு தொழி­லா­ளி­களை பார்த்­தால் எமது மாவட்­டத்­தில் வாய்ப் புற்று நோயா­ளர்­க­ளின் எண்­ணி­கை­யில் அதி­க­ரிப்பே ஏற்­ப­டும். எனவே பொது­மக்­க­ளின் நல­னைக் கருத்­தில் கொண்டே சில இறுக்­க­மான நடை­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­கி­ன்றோம் என்­றார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை­சே­னா­தி­ராசா கருத்து தெரி­விக்­கை­யில்:

புகை­யிலை செய்­கை­யா­ளர்­க­ளுக்கு மாற்­றுப் பயிர்ச் செய்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் வரை யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள பொதுச் சந்­தை­க­ளில் கடை­க­ளில் புகை­யிலை விற்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­கள் நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது.

கொழும்பு அரசு 2020 ஆம் ஆண்டு புகை­யி­லைச் செய்­கையை முற்­றா­கத் தடை செய்ய வேண்­டும் என்று அறி­வித்­த­து­டன் விவ­சா­யி­க­ளுக்­கான மாற்­றுப் பயிர்ச் செய்­கையை ஏற்­ப­டுத்­திக் கொடுப்­பது என்று கூறி­யது.

ஆனால் பின்­னர் இடம்­பெற்ற அமைச்சு மட்­டக் கூட்­டத்­தில் புகை­யி­லைச் செய்­கை­யா­ளர்­க­ளுக்கு மாற்­றுப் பயிர்ச் செய்­கையை ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கும் வரை அவர்­கள் புகை­யிலை விற்­பனை செய்ய முடி­யும் என்று கூறி­யி­ருந்­தது.

எனவே எமது விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரத்தைப் பாதிக்­கும் வேலையை சுகா­தார உத்­தி­யோ­கத்­தர்­கள் செய்­யா­தீர்­கள் என்­றார்.

அதன்­பின்­னர் கருத்­துத் தெரி­வித்த சுகா­தா­ரப் பணிப்­பா­ளர், பொதுச் சுகா­தார உத்­தி­யோ­கத்­தர்­கள் பொதுச் சந்­தை­க­ளில் வாயில் உமி­ழும் புகை­யிலை விற்­ப­வர்­க­ளையே இனங்­கண்டு அவர்­க­ளுக்கு எதி­ரா­கச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கின்­ற­னர்.

உமி­ழும் புகை­யி­லையை விற்­பனை செய்­வ­தா­லும் அதனை வாங்கி உண்­ப­வர்­கள் வாய்ப் புற்று நோய்க்கு ஆளா­கின்­ற­னர். அதி­லும் அதி­க­ள­வான வாய்ப் புற்று நோயா­ளர்­களை கொண்ட மாவட்­ட­மாக யாழ்ப்­பா­ணமே விளங்­கு­கின்­றது என்­றார்.