தன்னைப் பின் தொடர்ந்து வந்து ஆபாச வார்த்தைகளைப் பேசிய வாலிபரை காலரைப் பிடித்து காவல்நிலையத்துக்கு இட்டுச் சென்றுள்ளார் இளம்பெண் ஒருவர்.
பிப்ரவரி 25-ல் கரோல்பாக் பகுதியில் இளம்பெண் அவரது தோழியும் நடந்து சென்று கொண்டிருந்த போது 4-5 நபர்கள் பின் தொடர்ந்து அவர்களிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசியுள்ளனர். தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்ததை பார்த்து இரு பெண்களும் ரிக்ஷாவில் ஏறியுள்ளனர். மீண்டும் ரிக்ஷாவைப் பின் தொடர்ந்து வந்த அந்த நபர்கள் ஆபாசமாக பேசியுள்ளனர்.
இதனையடுத்து பொறுமையை இழந்த இளம்பெண் ரிக்ஷாவிலிருந்து இறங்கி பின் தொடர்ந்த ஒருவனை பிடித்து அடித்துள்ளார். மேலும் அந்த நபரை காலரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார்.
இது தொடர்பாக அந்த நபர் உட்பட 2 பேரைக் கைது செய்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தப் பெண்ணின் தைரியம் செயலுக்கு போலிசார் பாராட்டியுள்ளனர்.






