சினிமாக்களில் வருவது போன்று ஒரே பெண்ணாக இருந்து கொண்டு 4 5 ரவுடிகளை துணிச்சலாக எதிர் கொண்டு தனது கணவரை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றியுள்ளார் மனைவி. இதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஹர்யானா மாநிலம் யமுனா நகரில் காட்டு பகுதியில் வைத்து ஒருவரை 4 5 பேர் கடுமையாக தாக்குகின்றனர். அவரின் அலறல் சத்தம் காதை பிய்கின்றது.
ஒரு கட்டத்தில் ரவுடிகளின் தாக்குதலில் அவர் சுயநினைவை இழந்து கிழே விழுந்து விடுகின்றார். ரவுடிகள் விடாமல் அவரை தாக்கியுள்ளனர்.
அந்த நேரத்தில் இரண்டு கையிலும் 2 கம்புடன் அங்கு வந்த அவரது மனைவி 4 5 ரவுடிகளையும் தனி ஆளாக இருந்து கொண்டு கம்மபால் சுழட்டி அடித்து விரட்டி தனது கணவரை காப்பாற்றியுள்ளார்.
மனைவியை எதிர் கொள்ள முடியாத ரவுடிகள் அங்கிருந்து ஓடியுள்ளனர்.
இதை அங்கிருந்த யாரே ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
தாக்குதல் எதற்காக நடைபெற்றது என்ற விபரங்கள் வெளியாகவில்லை. போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
காட்டு பகுதி, கணவர் சுயநினைவின்றி கிடக்கின்றார். தான் ஒரு பெண் ரவுடிகளால் தனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் கணவரின் உயிர் தான் முக்கியம் என துணிச்சலான செயல்பட்ட மனைவிக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது






