யாழில் தொடரும் பயங்கர கொலைச் சம்பவங்களால் பெரும் பீதி!!

யாழ். ஏழாலை மத்தியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் வீட்டுக்கிணற்றிற்குள் இருந்து  நேற்றிரவு (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; யாழ். ஏழாலை பகுதியில் வசித்துவரும் திருமதி அனுஷா பாலகிருஷ்ணன் எனும் பெண்மணி யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகளை கணவனுடன் நுவரெலியாவிற்குச் சுற்றுலா அனுப்பிவிட்டு, தான் மாத்திரம் தனிமையில் வீட்டில் இருந்துள்ள நிலையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.திருமதி- அனுஷா பாலகிருஷ்ணன்(வயது-47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் அவரது உறவினர்கள், அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவமானது எப்போது நிகழ்ந்தது என்பது அறியாத நிலையில், இவரை காணாமல் அயலவர்கள் தேடிய போதே கிணற்றில் சடலமாக இவர் கணப்பட்டுள்ளார்.