மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஐ.தே.க குற்றப்பிரேரணை?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி, பதவி நீக்கியிருந்தால் அதற்கு எதிராக நீதிமன்றிற்கு செல்லவும் ஐக்கிய தேசியக்கட்சி திட்டமிட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றில் வழக்குத் தொடர்வதுடன் ஜனாதிபதி அரசியல் அமைப்பிற்கு எதிராக செயற்படுவதாகக் குற்றம் சுமத்தி குற்றப் பிரேரணை ஒன்றையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

இந்தவிடயம் குறித்து ஜனாதிபதி நேற்று நடைபெற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பிலும் கருத்து வெளியிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.