நீதிபதியையே கலங்க வைத்த மரணம்!!

அமெரிக்காவில் எட்டு வயதுள்ள சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையின் போது மருத்துவரும் வழக்கின் நீதிபதியும் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நடந்துள்ளது.2013ஆம் ஆண்டு Cherish Perrywinkle என்னும் எட்டு வயது சிறுமி பொருட்கள் வாங்குவதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மாலுக்குஅவளது அம்மா மற்றும் சகோதரிகளுடன் சென்றிருந்தார்.அப்போது உடை வாங்குவதற்கு உதவுவதுபோல வந்த 61 வயதுள்ள Donald Smith என்னும் நபர், சிறுமியுடன் மாயமானான்.அவனுடன் சென்ற குழந்தை வெகு நேரமாக திரும்பாதது கண்டு அதிர்ச்சியடைந்த அவளது தாயார் 911க்கு தகவலளித்தார்.மறுநாள் வெகு தொலைவிலுள்ள புல்வெளியொன்றில் அரை நிர்வாண நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று பிரேதப்பரிசோதனையின் முடிவுகளை Dr. Valerie Rao நீதிமன்றத்தில் வெளியிட்டார்.ஒரு அளவுக்குமேல் சிறுமியின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்கள் குறித்து பேச இயலாத அவர் கண்ணீர் மல்க தனக்கு சற்று ஓய்வு அளிக்க முடியுமா என்று கேட்டார்.எதிர் தரப்பு வக்கீல் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து உணர்ச்சி வசப்படும் இத்தகைய நடத்தைகள் வழக்கை திசை திருப்பும் என்று கூற, ஏற்கனவே கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்த நீதிபதி ஆட்சேபனையை ஏற்றுக்கொள்ளவில்லை.எட்டு வயதுக் குழந்தையின் உடல் எப்படி சூறையாடப்பட்டிருந்தது என்பதைக் கண்ணீருடன் மருத்துவர் தெரிவித்தபோது, நீதிபதிகள் உட்பட பலர் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர்.குழந்தையின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களைக் காட்டும் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டபோது பலரும் அந்த கோரக் காட்சிகளைக் காணச் சகியாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர்.அந்தக் குழந்தை அந்த 61 வயது Donald Smith என்னும் மிருகத்தால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டிருந்தாள், பின் ஒரு துணியால் அவளது கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறான் அவன்.

அவளது தொடையிலும் முழங்கால்களிலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன, அவன் கழுத்தை நெரித்ததில் குழந்தையின் ஒரு கண்ணிலிருந்து இரத்தம் வந்து விட்டது, குழந்தையின் பெண்ணுறுப்பு இருந்த இடமே தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது.அந்தக் குழந்தை 3 முதல் 5 நிமிடங்கள் கடுமையாக துடிதுடித்து இறந்திருக்கிறாள் என்று பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தக் குழந்தை தன்னைக் கற்பழிக்க முயன்றவனுடன் கடுமையாகப் போராடியுள்ளாள் என்பது கொலைகாரனின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களிலிருந்து தெரிகிறது என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.அரசு தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்தன, எதிர் தரப்பும் இனி யாரையும் சாட்சியமளிக்க அழைக்கப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டது.

இந்த வழக்கு, புதன் கிழமை நடை பெற உள்ள கடைசி கட்ட விவாதங்களுக்குப்பின் நீதிபதியின் முடிவுக்கு விடப்படும்.இதற்கிடையில் குழந்தையை கொடூரமாகக் கற்பழித்துக் கொலை செய்த Donald Smith, ஏற்கனவே பல பாலியல் வழக்குகளில் தொடர்புடையவன் என்பதும் கடந்த முறை பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி ஓராண்டு சிறையில் இருந்துவிட்டு 21 நாட்களுக்கு முன்தான் வெளியே வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது உறுதி.