இன்றைய ராசிபலன் (14/12/2018)

  • மேஷம்

    மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சாதிக்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மன சோர்வு  வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வளைந்துக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்

  • கடகம்

    கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நன்மை கிட்டும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

  • துலாம்

    துலாம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • தனுசு

    தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உடல் நலம் சீராகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • மகரம்

    மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளி போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

  • கும்பம்

    கும்பம்: வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டு் கொடுத்து போவது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். திடீர் பயணங்களால் திணறுவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • மீனம்

    மீனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.