வாழைச்சேனையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வாக்குகளைப் பெறுவதற்கு மதுபான போத்தல்களை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் தனது வாக்கினை வழங்கி விட்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
வாக்கு அளிக்கும் நிலையத்திற்கு அருகாமையில் சில வேட்பாளர்கள் நின்று கொண்டு வாக்களிக்க வரும் மக்களிடம் தங்களுடைய சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறிவருகின்றனர்.
இதனை பொலிஸாரும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாகவும், தேர்தல் கண்காணிப்பு பகுதி இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.







