உங்களது ராசி என்ன?.. 2018ல் இது மோசமான மாதமா??

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு வருடமும் கிரகங்களின் இட மாற்றத்தால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு மாதம் மிகவும் மோசமானதாக இருக்கும். இந்த வருடமும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்று மோசமான மாதங்கள் உள்ளன. இந்த மாதங்களில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள். இந்த மோசமான காலங்களில் எவ்வளவு தான் முயற்சித்தாலும், சாதகமாக எதுவும் நடக்காது.

உங்களுக்கு 2018 ஆம் ஆண்டு எந்த மாதம் மிகவும் மோசமானதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். இதைப் படித்து அந்த மாதங்களில் அந்தந்த ராசிக்காரர்கள் உஷாராகிக் கொண்டால், சந்திக்கவிருக்கும் பெரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

சரி, இப்போது 2018 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாதம் மோசமானதாக இருக்கும் என்பது குறித்து காண்போமா!

மேஷம்

ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் மிகவும் கடினமானதாக இருக்கும். இந்த மாதத்தில் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இம்மாதத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் எந்த ஒரு காரியத்தையும் அவசர அவசரமாக செய்ய வேண்டியிருக்கும். இதனால் அதிக மனப்பதற்றத்துடனேயே இருக்க வேண்டியிருக்கும். எனவே தினமும் தியானத்தில் ஈடுபடுவது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2018 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் நிறைய மாற்றங்களைக் காண்பார்கள். இந்த மாதத்தில் ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையுடன் செல்வது மிகவும் நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் கடுமையான காலமாக இருக்கும். இந்த மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் பல்வேறு வாக்குவாதங்களில் ஈடுபட நேரிட்டு, பல்வேறு தவறான புரிதல்களுக்கு உள்ளாவார்கள். ஆனால் இந்த மாதத்தின் இறுதியில் அனைத்து பிரச்சனைகளும் விலகிவிடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மோசமான மாதமாக இருக்கும். இந்த மாதங்களில் கம்யூனிகேஷன் சிக்கல்களை சந்திப்பார்கள். இந்த மாதத்தில் கடக ராசிக்காரர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனால் மற்றவர்கள் உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொள்வதைத் தவிர்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் துணையுடன் சேர்ந்து எந்த ஒரு திட்டத்தை தீட்டுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருங்கள். இதனால் தனக்கான வாழ்க்கை துணை தன்னைப் பற்றி தவறாக நினைப்பதைத் தவிர்க்க முடியும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மோசமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இந்த மாதம் சற்று சவாலான மாதமாகவே கன்னி ராசிக்காரர்களுக்கு இருக்கும். எனவே எதையும் பொறுமையுடனும், எளிதாகவும் செய்து வாருங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் சவால் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் மிகவும் டென்சனாகவும், மன பதற்றத்துடனும், தூக்கமின்றியும் கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் சற்று ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் கடினமான காலமாக இருக்கும். இந்த மாதத்தில் மற்ற மாதங்களை விட சற்று சென்சிடிவ்வாக இருப்பார்கள் இந்த ராசிக்காரர்கள். இந்த மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் தனது கடந்த கால உறவுகளால் மார்ச் மாதம் வர நன்மை நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தது, ஏப்ரல் மாதத்தில் சற்று கடினமானதாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள நினைப்பார்கள். மேலும் கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு, சிறப்பாக நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இந்த மாதத்தில் அது முடியாமல் போகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் கடினமாக இருக்கும். இந்த மாதத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த ஏப்ரல் மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த மாதத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு கவனமாக இருக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஆரோக்கிய பிரச்சனை தீவிரமாவதைத் தடுக்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மோசமானதாக இருக்கும். இந்த மாதத்தில் இவர்களது ஆரோக்கியம் மற்றும் காதல் வாழ்க்கை சற்று கடினமானதாகவே இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தைத் தவிர, வருடத்தின் அனைத்து மாதங்களுமே சிறப்பாக இருக்கும். ஆகவே இந்த மாதம் தனது ஆரோக்கியம் மற்றும் காதல் வாழ்வில் சற்று கவனத்தை செலுத்துவது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு மே மாதம் சற்று கடினமானதாக இருக்கும். இந்த மாதத்தில் எந்த ஒரு விஷயமும் இவர்களுக்கு சில கடுமையான அதிருப்திக்கு வழிவகுக்கும். இந்த மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களது பொறுமைத்தனத்தை இழக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது நீங்கள் சந்திக்கும் பிரச்சனையின் நிலைமையை மோசமாக்கிவிடும்.