வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா?

தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி மீண்டும் மக்கள் ஆணையை கோரி நிற்கிறது.

தமிழரசு கட்சியின் பிரச்சாரங்களை பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, தாங்கள் எதைச் சொன்னாலும் மக்கள் ஆட்டு மந்தைகள் போல் தலையை ஆட்டிக் கொண்டிருப்பர். எனவே தங்களால் மக்களை இலகுவாக ஏமாற்றிவிட முடியுமென்றே அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது.

சம்பந்தன் முன்னைய தேர்தல்களின் போது எதைச் சொன்னாரோ அதையே தற்போதும் சொல்லிவருகிறார். மக்கள் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கு ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்.

சர்வதேசம் இந்தத் தேர்தலை அவதானித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலின் பின்னர் சர்வதேசம் சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கும். சம்பந்தன் இதே விடயங்களைத்தான் மாகாண சபைத் தேர்தலின் போதும் குறிப்பிட்டார். இதே விடயங்களைத்தான் பாராளுமன்ற தேர்தல்களின் போதும் குறிப்பிட்டார்.

தற்போது உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களின் போதும் அதே அரைத்த மாவைத்தான் அரைக்கின்றார்.

மக்கள் இந்த இடத்தில் கேட்க வேண்டிய கேள்வி – அதென்ன ஒரே விடயத்தையே தொடர்ந்து சொல்லி வருகின்றார்கள்?

ஒரு பாராளுமன்ற தேர்தலின் போது முக்கியமாக இருக்கும் விடயங்கள் எவ்வாறு உள்ளுராட்சித் தேர்தலின் போதும் முக்கியமானதாக இருக்கும்? மக்கள் இப்படிச் சிந்திக்க மாட்டார்கள் என்பதில் சம்பந்தன் தரப்பினர் மிகவும் உறுதியாக இருக்கின்றனர். மக்கள் சிந்திக்க மாட்டார்களா?

images  மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா?- யதீந்திரா (கட்டுரை) imagesஇன்று சம்பந்தன் மூன்று பொறுப்புக்களை வைத்திருக்கின்றார். தமிழ் மக்களின் தலைவர், கூட்டமைப்பின் தலைவர் இறுதியாக இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்.

இந்த மூன்று பொறுப்புகளில் ஏதாவது ஒன்றை ஒழுங்காக செய்திருக்கிறாரா? ஆனால் இப்படியெல்லாம் மக்கள் தங்களுக்குள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதிலும் சம்பந்தன் தரப்பினர் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.

சம்பந்தன் தமிழ் மக்களின் தலைவராக செயற்பட்டிருந்தால் கூட்டமைப்பு ஒரு செய்ற்திறனற்ற அமைப்பாக மாறியிருக்காது.

சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக செயயற்பட்டிருந்தால் கூட்டமைப்பிற்குள் பிளவுகள் தோன்றிருக்காது அத்துடன் ஒவ்வொருவராக அதிலிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டிருக்காது.

sumanthiran-964854  மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா?- யதீந்திரா (கட்டுரை) sumanthiran 964854சுமந்திரன் இந்தளவிற்கு தன்னிச்சையாக செயற்பட்டிருக்க மாட்டார். சம்பந்தன் ஒரு சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால் அரசாங்கம் அவரைக் கண்டு அஞ்சியிருக்கும்.

ஆனால் ஜக்கிய தேசிய கட்சியோ தற்போது தங்கமான ஆள் என்று நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் முக்கியமான விடயங்களில் எல்லாம் பாதாம் பருப்பு உண்டு கொண்டிருந்தால் அவர் அரசாங்கத்தை பொறுத்தவரையில் ஒரு தங்கமான ஆள்தான்.

இன்று இந்த நாட்டில் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் ஊழல் தொடர்பில் அனைவருமே அதிர்சிடைந்திருக்கின்றனர்.

நாட்டு மக்களுக்கு சேர வேண்டிய நிதி யாரோ ஒரு சில செல்வந்தர்களின் சொத்தாக மாறியிருக்கிறது. 11,145 மில்லியன் தொகை இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

மகிந்த ராஜபக்சவின் ஊழலை விசாரிக்கப் போவதாக சூழுரைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் மகிந்தவை தூக்கி சாப்பிடுமளவிற்கு செயற்பட்டிருக்கின்றனர்.

இந்த ஊழல் விவகாரம் தற்போது தென்னிலங்கையின் அரசியலை ஆட்டம் காணச் செய்திருக்கிறது. மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் பிரச்சாரங்களில் இதனை முக்கியமான பேசுபொருளாக் கொண்டிருக்கிறார்.

sampanthan-  மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா?- யதீந்திரா (கட்டுரை) sampanthanநாட்டை கொள்ளையடிப்பதற்கு தான் விடப் போவதில்லை என்று பேசி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரோ பாதாம் பருப்பை மென்று கொண்டு அமைதியாக இருக்கின்றார்.

இன்றுவரை சம்பந்தன் இது தொடர்பில் வாய் திறக்கவில்லை. விடயங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் சம்பந்தன் ஒரு சரியான மக்கள் தலைவராகவும் இல்லை, ஒரு சரியான கட்சியின் தலைவராகவும் இல்லை, ஒரு சரியான எதிர்க்கட்சித் தலைவராகவும் இல்லை. ஆனால் மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்று அவர் கூறி வருகிறார்.

தமிழரசு கட்சியின் தேர்தல் மேடைகளில் தனித்துத் தெரியும் பிறிதொருவர் சுமந்திரன். தனது சொந்த மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது தொடர்பில் எவ்வித கரிசனையும் கொள்ளாத ஒருவர்.

சுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலை புரிந்து வைத்திருக்கும் முறையே முற்றிலும் வித்தியாசமானது. அது ஒருவர் தனது குடும்ப விவகாரத்தை கையாளுவது போன்றது.

இந்த முயற்சிகள் தோல்வியடைந்தால் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு அரசியலிலிருந்து விலகிவிடுவேன் என்று அன்மையில் கனடிய ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார்.

ஏனென்றால் இந்த விடயங்கள் தோல்வியடைந்தால் அதற்கு மற்றவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். அவர்கள் மதில் மேல் பூனை போல் இருக்கின்றனர்.

சுமந்திரன் கூறும் மதில் மேல் பூனைகள் யார்? அது கூட்டமைப்பின் பெயரளவு பங்காளிக் கட்சிகளான புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே அந்த மதில் மேல் பூனைகள் ஆவர்.

ஒரு வேளை விடயம் தோல்விடைந்து விட்டது. உண்மையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அரசியல் தீர்வு நிச்சயமாக வரப் போவதில்லை.

அந்த கோணத்தில் பார்த்தால் விடயங்கள் நிச்சயம் தோல்வியில்தான் முடியப் போகிறது. இங்கு பிரச்சினை விடயம் தோல்வியில் முடிவடைகிறதா அல்லது வெற்றியில் முடிவடைகிறதா என்பதல்ல மாறாக அவ்வாறு தோல்விக்கு ஒருவர் பொறுப்பெடுத்துக் கொண்டு ஒதுங்குகிறார் என்றால் அவரால் அதுவரை மேற்கொள்ளப்பட்ட விடயங்களின் சுமையை யார் பொறுப்பெடுப்பது? தமிழ் மக்களா?

tna_vantharumulai_visit  மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா?- யதீந்திரா (கட்டுரை) tna vantharumulai visit

ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் கையாளும் ஒரு ஏகப் பிரதிநிதியாக சுமந்திரனே செயற்பட்டு வருகிறார்.

ஆட்சி மாற்றத்திற்கான திரைமறைவு கலந்துரையாடல்கள் தொடங்கி அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் வரையில் அனைத்தும் சுமந்திரனது கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அதுவரை நம்;பிக்கையுடன் நோக்கப்பட்ட மேற்குலக அழுத்தங்கள்; படிப்படியாக குறைவடைந்து கொண்டு சென்றன.

போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான கரிசனை படிப்படியாக குறைந்தது. இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் என்பதாலேயே நடத்த கொலைகள் மற்றும் அழிவுகள்தான் தமிம் மக்களிடம் எஞ்சியிருந்த ஒரேயொரு விடயம்.

அது இன்று இருக்கிறதா அல்லது இல்லையா என்னும் நிலையில் தமிழ் அரசியல் நடு வீதிக்கு வந்திருக்கிறது. நடு வீதியில் நிற்கும் ஒரு மனிதன் எப்போதும் ஏதேவொரு வாகனத்தில் அடிபட்டுச் சாகலாம்.

சம்பந்தன் – சுமந்திரன் கூட்டு தமிழ் அரசியலை அவ்வாறானதொரு இடத்திற்குத்தான் கொண்டு வந்திருக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் சுமந்திரன் மிகவும் சாதாரணமாக தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டு நான் அரசியலிலில் இருந்து விலகிவிடுவேன் என்கிறார். இந்த நிiலைப்பாட்டிற்கு மக்களை வாக்களிக்குமாறு தமிழரசு கட்சி கோருகிறது? மக்கள் வாக்களிக்கலாமா?

ஆனாலும் சம்பந்தனும் சுமந்திரனும் நம்பிக்கையோடு இருக்கின்றனர். அதாவது, எங்களுடை மக்கள் நாங்கள் என்ன செய்தாலும் வாக்களிப்பார்கள் – அவர்கள் ஏன் என்று தங்களையும் கேட்க மாட்டார்கள் மாறாக தங்களுக்குள்ளும் அப்படியான கேள்விகளை கேட்க மாட்டார்கள்.

இதனை சுமந்திரனின் வார்த்தையில் கூறுவதனால் அமைதியான பெரும்பாண்மை அமைதியாகத்தான் இருக்கும். அவர்கள் சத்தம் போடமாட்டார்கள் ஆனால் அவர்கள் முடிவை எடுப்பார்கள்.

சுமந்திரனை பொறுத்தவரையில் அமைதியான பெரும்பாண்மை அரசியல் தொடர்பில் விழிப்புணர்வற்றது. எனவே விழிப்புணர்வற்ற ஒரு மக்கள் கூட்டம் எப்போதுமே தங்களுக்கு வசிதியான, பழக்கப்பட்ட ஒன்றுடனேயே இருக்க விரும்புவர்.

அன்மைக்காலங்களில் அவர்களுக்கு பழக்கப்பட்டது தமிழரசு கட்சியின் சின்னம்தான். இது சம்பந்தன் சுமந்திரன் கணிப்பு.

ஆனால் மக்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்களா? அவர்கள் ஒரு போதும் சிந்திக்க மாட்டார்களா? இன்று பெரும் தலைவராக சிலரால் கருதப்படும் சம்பந்தன் தொடர்ந்து மூன்று முறை அவரது சொந்த மாவட்டமான திருகோணமலையில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் என்பதையும் ஒரு முறை சிந்தித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மக்களை தும்புத் தடிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு மக்கள் வரலாறு முழுவதும் பாடங்களை படிப்பித்திருக்கின்றனர். தமிழ் மக்கள் எப்போது பாடத்தை படிப்பிக்கப் போகின்றனர்?

 – யதீந்திரா