மனதை நெகிழ வைக்கும் மனைவியை இழந்த ஆணின் சாட்சியம்!

கள்ளத்தொடர்பு கணவருக்கு தெரியவந்ததால் தற்கொலை செய்துக்கொண்ட ஆசிரியை ஒருவரின் கணவர் குறித்த சம்பவம் தொடர்பில் காவற்துறையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மரணித்தது எனது மனைவியே. நாங்கள் திருமணம் செய்து 9 வருடங்கள் ஆகின்றன. நான் வாகனங்களை திருத்தும் ஒரு மெக்கேனிக், மனைவி ஆசிரியையாக கடமையாற்றி வந்தார். கடந்த 2 வருடங்களாக மனைவிக்கு கள்ளத்தொடர்பிருப்பதாக சந்தேகமுற்றேன்.

இது சம்பந்தமாக நிந்தித்தும், உபதேசம் செய்தும் , அவரை தாக்கியும் திருத்துவதற்கு முயற்சித்தேன்.

ஆனால் மனைவி கள்ளத்தொடர்பை நிறுத்தவில்லை.

இதனால் அடிக்கடி வீட்டில் எமக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டது.

மனைவியை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 முறைப்பாடுகளும் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.

இணக்கசபைக்கும் சென்றோம்..

தீர்மானம் இல்லை.

வீட்டிற்கு வருகைதந்தன் பின்னர் அலுமினியம் பட்டியில் அவரை தாக்கினேன்.

இதனால் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்த சிகிச்சை பெற்று வீடு திரும்பினாள்.

இந்நிலையில் அவருக்கு சாப்பாடு வாங்குவதற்காக தம்பி ஒருவருடன் நகருக்கு சென்றேன்.

திரும்பி வந்து பார்க்கையில் எமது அறைக்குள் தீயினால் கருகும் மனம் உணர்ந்தேன்.

கதவை தட்டினோம் ஆனால் அவர் திறக்கவில்லை.

எனினும், பின்னாள் உள்ள கதவை திறந்து அவரை பார்வையிட்ட பொழுது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த டினர் திரவத்தினை உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டு எரியுறும் நிலையில் காணப்பட்டார்.

தீயை கட்டுபடுத்தி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருமணமான பெண் என தெரிந்தும் அந்த பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் தனது மனைவி மீது காதல் கொண்டமையினால் நான் எனது மனைவியை இழந்து அநாதையானேன்.

எனது மனைவி மீது நான் அளவற்ற பாசம் கொண்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர் குறித்த ஆசிரியையின் சடலம் கணவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு, தகாத உறவு வைத்திருந்த நபர் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.