மூத்த திரைப்பட நடிகை மரணம்: திரையுலகினர் அஞ்சலி!!

தெலுங்கு திரைப்பட மூத்த நடிகை லட்சுமி தேவி கனகலா தனது 78வது வயதில் காலமானார்.

1980-களில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி தேவி.

பின்னர் நடிப்பதை லட்சுமி கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார்.

இவரின் கணவர் தேவ்தாஸ் கனகலாவும் பிரபல நடிகர் ஆவார்.

இவரின் மகன் ராஜீவ் தற்போது முன்னணி நடிகராக உள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு நோய்கள் காரணமாக லட்சுமி சில தினங்களாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

நேற்று காலை மருத்துவமனையிலேயே லட்சுமியின் உயிர் பிரிந்தது.

லட்சுமியின் மரணத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உட்பட பலர் நேரில் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.