சீன அரசிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட இலங்கையின் துறைமுக நகரத்தினை காப்பாற்றியது ரணில் விக்ரமசிங்க என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அம்பலாந்தோட்டையில் நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
துறைமுக நகரம் அமைக்கப்படும் இடத்தினை குத்தகை அடிப்படையில் சீன அரசிற்கு வழங்கியது நல்லாட்சி அரசாங்கமா? மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமா?
அந்த குத்தகை பத்திரத்தை மீண்டும் பெற்று நாட்டிலுள்ள ஒரு பகுதி இடத்தினை காப்பாற்றியது ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியுமே.
நாம் எப்பொழுதுமே எமது நாட்டினை தாரை வார்த்துக் கொடுத்ததும் இல்லை. கொடுக்கப் போவதும் இல்லை.
ஆனால் நாம் எம் மீது திணிக்கப்பட்டுள்ள கடன் சுமையை குறைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.






