மருத்துவ ஊர்தியொன்று பிங்கா ஓயாவில் குடைசாய்ந்ததில் அதில் பயணித்த மூன்று தாதியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அகுரணை தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான மருத்துவ ஊர்தியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த மருத்துவமனையில் இருந்து நோயாளி ஒருவரை இன்று அதிகாலை தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சாரதிக்கும் மற்றும் மருத்துவருக்கும் இந்த விபத்தில் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.







