சிறிதரனால் நியமிக்கப்பட்ட பெண் வேட்பாளரின் திருவிளையாடல்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் இன்று(25) தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

26992740_785686928303203_2676939242890982459_nகிளிநொச்சி கரைச்சி  பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர்  ஒருவர் சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் இன்று(25) தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது  செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கரைச்சி பிரதேச சபைக்கு  பரந்தன் வட்டாரத்தில்  போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்  வேட்பாளரான கிருஸ்வேணி விக்ரர்லோகநாதன் ( விக்கரர்சாந்தி)   என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக வியாபார நிலையம் ஒன்றை அலுவலகமாக பயன்படுத்தியமை மற்றும் போலி மாதிரி வாக்கு சீட்டுக்களை வைத்திருந்தமை போன்ற காரணங்களால் கைது செய்யப்பட்டு  கிளிநொச்சி  பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார் . அத்தோடு அவரிடம் இருந்த போலி வாக்குச்  சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வாக்குச்  சீட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திகுமாரின் சுயேட்சைக் குழுவின் கேடயச் சின்னத்திற்கு பதிலாக வெற்றிக் கிண்ணம்  அச்சிடப்பட்டு மக்களிடம் விநியோகிப்பட்ட நிலையிருலும்  விநியோகிக்க தயாராக இருந்த நிலையிலும் ஒரு தொகை மாதிரி வாக்குச்  சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.