தம்பதியினரை உயிரோடு சாப்பிட்ட கொடூரர்கள்!

பிரேசில் நாட்டில் தம்பதியினரின் வீட்டிற்குள் நுழைந்த திருட்டு கும்பல், அவர்களை கொலை செய்து உடல் உறுப்புகளை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Camaçari நகரில் வெளிப்புறமான இடத்தில் Cristina Amaral தனது கணவர் Juvenal- உடன் வசித்து வந்துள்ளார்.

இவர்கள், இருவரும் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்த திருட்டு கும்பல், ஏதேனும் பணம் கிடைக்குமா என்று தேடியுள்ளது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி வீட்டிற்குள் பணம் இல்லாத காரணத்தால், தம்பதியினரை குறிவைத்துள்ளனர்.

இதில், கிறிஸ்டினாவை கணவன் கண்ணெதிரிலேயே பலாத்காரம் செய்த இவர்கள், கணவர் Juvenal- யும் கொலை செய்துள்ளனர்.

அதன்பின்னர், கிறிஸ்டினா உயிரோடு இருக்கும்போதே உடலில் இருந்த சில உறுப்புகளை சாப்பிட்டு கொலை செய்து அவரை குழிதோண்டி புதைத்துள்ளனர்.

கணவரின் உடலை புதைக்காமல் அவருக்கு அருகிலேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஆரம்பத்தில் கணவர் மட்டுமே கொலை செய்யப்பட்டுள்ளார் என எண்ணிய பொலிசார், வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.

அதன்பின்னர், கணவர் இறந்துகிடந்த இடத்திற்கு அருகில், பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை அறிந்த அவர்கள், அதற்குள் இருந்து கிறிஸ்டினாவின் சடலத்தை கைப்பற்றினர்.

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடிப்பது, கொலை செய்வது, பெண்களை பலாத்காரம் செய்வது போன்றவற்றையே இவர்கள் தொழிலாக செய்துவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள், 5 பேர் மீது கொலை கொள்ளை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.