தன்னை ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக ரசிகர்கள் காண வேண்டும் என்பதற்காகவே மெனக்கெட்டு தனது உடலை வருத்தி உழைக்கும் பல்வேறு நடிகர்கள் இருக்கிறார்கள்.
அதிலும் மிக முக்கியமாக தனது கதாபாத்திரத்தின் மூலம் அனைவரையும் வாய்திறக்க வைக்க கூடியவர் நடிகர் விக்ரம். இவருடைய நடிப்பில் துருவ நட்சத்திரம் மற்றும் சாமி என்று இரு படங்கள் வெளியாக இருக்கிறது.
நடிகர் விக்ரமுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். விக்ரம் மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. கலைஞரின் பேரனுக்கும் இவரது மகளுக்கும் கலைஞர் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது.
தற்போது இவரது மகனும் வர்மா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விக்ரமின் மனைவி சைலஜா குறித்து ஒரு தகவல் சமூக வலைதளத்தில் உலா வருகிறது.
விக்ரமின் மனைவியான சைலஜா அடிப்படையில் ஒரு சைக்காலஜி நிபுணர். இவர் போதை பொருட்களுக்கு அடிமையாகும் பலருக்கும் தனது கவுன்சிலிங் மூலம் மறுவாழ்வு கொடுத்துள்ளார்.
தற்போது சைலஜா சென்னையிலுள்ள ஒரு பிரபல பள்ளியில் சைக்காலஜி ஆசிரியராக வேலை செய்து வருகிறாராம்.







