தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் சூர்யா, கார்த்தி. இவர்கள் இருவருக்குமே நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இவர்கள் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து வந்தவர் முருகன், இவருக்கும் கோவிந்தம்மாள் என்பவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைப் பெற்றுள்ளது.
இவர்களது திருமணத்தில் சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் குடும்பமே இவ்வளவு எளிமையானவர்களா என்று கூறி பாராட்டி வருகின்றனர்.
அது மட்டும் இல்லை. இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் இன்ப அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளனர்.