1ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 6ஆம் வகுப்பு மாணவி

உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி கழிவறையில் கத்தி குத்து காயங்களுடன் 1ஆம் வகுப்பு மாணவன் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PTI0292-750x506

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் உள்ள பிரைட்லேண்ட் பள்ளியில் படித்து வந்த 1ஆம் வகுப்பு மாணவன் கழிவறையில் கத்து குத்து காயங்களுடன் கிடந்துள்ளான். இதுகுறித்து அந்த மாணவனின் தந்தை கூறியதாவது:-

எனது மகன் குத்து குத்து காயங்களுடன் கழிவறையில் கிடந்தத தகவலை பள்ளி நிர்வாகம் எங்களிடம் தெரிவித்தது. அவனை 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்தியதாக தெரிவித்தனர் என்று கூறியுள்ளார்.

பள்ளி அதிகாரிகள், மாணவனின் உயிரிழப்பு புளூ வேல் விளையாட்டுடன் தொடர்பு இருக்கும் என சந்தேகத்துடன் தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த வருடம் 2ஆம் வகுப்பு மாணவன் பள்ளி கழிவறை அருகே காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் 16வயது மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.