பிள்ளைகளை கட்டில்களுடன் சங்கிலியால் கட்டி வைத்திருந்த பெற்றோர் கைது!!

இரண்டு வயது முதல் 29 வயது வரை­யான தமது 13 பிள்­ளை­களை வீட்டின் கட்­டில்­க­ளுடன் சங்­கி­லி­களால் பிணைத்து வைத்­தி­ருந்த பெற்றோர் அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

Capture xடேவிட் அலன் டேர்பின் (57) அவரின் மனை­வி­யான லூயிஸ்அனா டேர்பின் (49) ஆகிய இரு­வ­ருக்கும் எதி­ராக சித்­தி­ர­வதை மற்றும் பிள்­ளை­க­ளுக்கு ஆபத்­துக்­குட்­ப­டுத்­தி­யமை ஆகிய குற்­றங்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

David-Allen-Louis-Ana 13 பிள்ளைகளை கட்டில்களுடன் சங்கிலியால் கட்டி வைத்திருந்த பெற்றோர் கைது!! 13 பிள்ளைகளை கட்டில்களுடன் சங்கிலியால் கட்டி வைத்திருந்த பெற்றோர் கைது!! David Allen Louis Anaஇந்தப் பிள்­ளை­களில் ஒருவர் 17 வயது யுவதி. குறித்த வீட்­டி­லி­ருந்து தப்பிச் சென்று கைத்­தொ­லை­பேசி ஒன்றின் மூலம் அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் வழங்­கி­யதைத் தொடர்ந்து இந்தப் பிள்­ளைகள் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வீட்­டுக்குச் சென்ற அதி­கா­ரிகள் பிள்­ளைகள் படுக்கை­களில் சங்­கி­லி­களால் பிணைக்­கப்­பட்ட நிலையில் இருக்க கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

இப் பிள்­ளை­களில் ஏழுபேர் 18 வய­துக்கும் 29 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மிகவும் இளைத்துப் போன நிலையில் அழுக்­கேறி காணப்­பட்ட 13 பிள்­ளை­க­ளையும் பொலிசார் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

இவர்­க­ளுக்கு தற்­போது சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கின்­றது. 2010 ஆம் ஆண்டு கலி­போர்­னி­யா­வுக்கு இடம்­பெ­யர்­வ­தற்கு முன்னர் இந்தப் பெற்றோர் டெக்ஸாஸ் மாநி­லத்தில் வசித்து வந்­துள்­ளனர்.

டேவிட் அலன் டேர்பின் ஒரு பொறி­யி­ய­லா­ள­ராக பணி­யாற்றி வந்­த­போ­திலும் பிள்­ளைகள் அதி­க­மாக இருந்­த­தனால் அவர் நிறைய கடன்பட்­டுள்ளார்.

குடும்­பத்தில் இவர் மட்­டுமே தொழில் செய்து வந்­ததால் அவ­ரு­டைய ஊதி­யத்தை விட செலவு கையை மீறி­விட்­டது. இதனால் அவர் தனது பிள்­ளை­களை அவர்­களின் படுக்­கை­களில் சங்­கி­லி­களால் பிணைத்து வைத்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக டேர்­பியின் குடும்­பத்­தி­னரைக் காண­வில்லை என அவ­ரு­டைய பெற்றோர் தெரி­வித்­துள்­ளனர். இவர் தனது குடும்­பத்­தி­ன­ருடன் மகிழ்ச்­சி­யாக காணப்­படும் பல படங்கள் அவ­ரு­டைய பேஸ் புக்கில் பதி­வா­கி­யுள்­ளன.

இந்தத் தம்­ப­தியர் குறித்து அய­லவர் ஒருவர் கூறு­கையில், “அவர்­க­ளு­டைய வீட்­டி­லி­ருந்து எவரும் வெளியே வரு­வதைக் காணவே முடி­யாது.

இரு­வரும் மளிகைக் கடைக்குச் சென்று பொருட்­களை வாங்­கி­விட்டு வரு­வார்கள். அவ்­வ­ள­வுதான் “என்றார். மற்­றொ­ருவர் கூறு­கையில் இவர்களின் பிள்ளைகள் ஏன் வெளியே வந்து விளையாடுவதில்லை என்பது குறித்து தான் ஆச்சரியமடைந்ததாக தெரிவித்தார்.