விஜய் சேதுபதியா இது? ஷாக் ஆக வைத்த புகைப்படம்

மசாலா கதாபாத்திரங்களுக்கு பின்னால் சுற்றும் நடிகர்களுக்கு மத்தியில் கதைக்காக நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.

இவர் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பார் என்று அனைவருக்குமே தெரியும். ஏற்கனவே ஆரஞ்ச் மிட்டாய் படத்தில் பெரியவர் கெட்டப்பில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய 25வது படமான சீதக்காதி படத்தில் இன்னும் அச்சு அசலாக ஒரு வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார்.