சிதம்பரத்தில் பிறந்து சில மணி நேரங்களில் தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் பஸ் நிலைய டாஸ்மாக் கடையின் பின்புறம் மரத்தின் அடியில், குப்பைகளுக்கு நடுவே ஒரு குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அருகே ஒரு மஞ்சள் நிற கட்டைப்பையும், குழந்தையின் கீழ்புறம் சில துணிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவம் அறிந்து வருகை தந்த சிதம்பரம் நகர போலீசார் குழந்தையினை கைப்பற்றி, குழந்தை இறந்து பிறந்ததால் தூக்கி வீசப்பட்டதா? அல்லது பெண் குழந்தையாக பிறந்ததால் கொல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் குப்பைகளுக்கு நடுவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் சிதம்பரம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.