வெளியான ஆதாரம்… சிம்பு – ஓவியா திருமணமா?

நடிகர் சிம்பு – ஓவியா இருவரும் ரசிகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கோலிவுட்டில் பேச்சப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சிம்பு. தற்போது இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இவருக்கும், பிக்பாஸ் புகழ் ஓவியாவுக்கும் ரகசியமாக திருமணம் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விரைவில், இவர்களது திருமணம் நடக்கயிருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஓவியா, ஆரவ்வை காதலித்து வந்துள்ளார். அந்நிகழ்ச்சிக்குப் பிறகும் ஓவியா அவரை காதலித்துள்ளார்.

இப்படியிருக்கும் போது, சிம்புவிற்கு, ஓவியா மீது ஈர்ப்பு இருந்துள்ளதாகவும், ஓவியாவை தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் ஒரு டுவீட் வெளியிட்டிருந்தார்.

இப்படி இருந்த நிலையில், தற்போது ஓவியா மற்றும் சிம்பு இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இதன் காரணமாக, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது.

மேலும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு தலை பட்சமாக ஆரவ்வை காதலித்த ஓவியா, தற்போது, அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக சமீபத்தில் டி.ராஜேந்திரன், திருப்பதி சென்று தன் மகன் சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு நல்லவொரு மருமகள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

625.0.560.320.310.730.053.800.670.160.90