திருமணம் ஆகி 8 மாதங்களே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை!

5a0d2157833f8-IBCTAMILநெல்லை மேலப்பாளையத்தை அடுத்துள்ள கருங்குளம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கும் 26 வயதுடைய இசக்கி மாலதி என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை (06) காலை வீட்டில் இசக்கி மாலதி மர்மமான முறையில் தூக்கில் சடலமாக தொங்கினார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மேலப்பாளையம் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் இசக்கி மாலதி தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இசக்கி மாலதிக்கு திருமணம் ஆகி 8 மாதமே ஆவதால் அவரது தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா என்று நெல்லை ஆர்.டி.ஓ மைதிலி விசாரணை நடத்துகிறார்.

இது தொடர்பாக இசக்கிமாலதியின் கணவர் பால்ராஜ் மற்றும் மாமியார் சரஸ்வதி ஆகியோரிடமும் விசாரணை நடந்து வருகின்றது.