முகநூலின் போலிக் கணக்குகளுக்கு இனி வருகிறது ஆப்பு!!

பல்வேறு பயனர்களைத் தன்வசம் கவர்ந்துள்ள சமூக வலைதளமான முகநூலானது.போலி கணக்குகள் தொடர்பாக, புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது போலி கணக்குகள் தான்(fake ID).ஒரு புகைப்படத்தை பதிவு செய்யும்போது படத்தில் இருக்கும் நபர்களை டேக்(tag)செய்வதற்காக அடையாளம் காட்டுவது முகநூலில் ஏற்கெனவே இருக்கும் வசதிகளில் ஒன்றுதான். அதிலிருந்து இந்த முகத்தை ஆராயும் அமைப்பு, தற்போது சற்று மேம்படுத்தப்படும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை முகநூலானது கண்டறிந்துள்ளது.முகநூலில், ஒரு புகைப்படம் பதிவு செய்யும்போது படத்தில் இருக்கும் முகங்களின் நுணுக்கமான தகவல்களை சேகரிக்கிறது இந்த செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட பேஸியல் ரெகக்னிஷன் (facial recognition) தொழில்நுட்பம்.அதேபோல, படங்களை வேறொருவர் பயன்படுத்தும் பொழுது ஏற்கனவே இருக்கும் தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அந்த குறிப்பிட்ட புகைப்படத்தை அடையாளம் காண முடியும்.இந்த வசதியை பயன்படுத்தும்பொழுது, ஒரு புகைப்படத்தில் தென்படும் அனைத்து முகங்களின் தரவுகளைச் சேகரிக்கும் இந்தத் தொழில்நுட்பமானது, அடுத்த வேலையாக அதனிடம் இருக்கும் பிற தரவுகளோடு ஆராய்ந்து பார்க்கும்.அப்படி யாராவது ஒருவரின் புகைப்படம் வேறொரு இடத்தில் காணப்பட்டால் அவருக்கு அதைப் பற்றிய தகவலை அனுப்பி வைக்கும். அந்த புகைப்படம் அவரின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் புகாரளித்தால் அது நீக்கப்படும்.பெரும்பாலான போலிக் கணக்குகள் இதுபோன்ற புகைப்படங்களையே அதிகமாக பயன்படுத்துவதால், அவற்றை எளிதாக இந்தத் தொழில்நுட்பம் மூலமாக கண்டறிந்து, நீக்க முடியும்.ஆனால், இந்தத் தொழில்நுட்பம் தானாகவே டேக் செய்யும்பொழுது புகைப்படத்துக்கு சம்பந்தமில்லாதவர்களும் கண்காணிக்கப்படும் சந்தர்ப்பமுண்டு. அதேபோல ஒரு நடிகர் அல்லது நடிகையின் புகைப்படத்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம்.ஆனால், இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்க முகநூலானது வேறு எதாவது திட்டம் வைத்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.முகநூலில் இருக்கும் 2.1 பில்லியன் கணக்குகளில், 270 மில்லியனுக்கும் அதிகமான போலிக் கணக்குகள் உள்ளதென, முகநூல் நிறுவனம் அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.