இலங்கை சிறுவன் படைத்த கின்னஸ் சாதனை! ஆசி வழங்கிய மைத்திரி

கின்னஸ் சாதனை ஒன்றை பதிவு செய்த சிறுவனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.

உலகில் புத்தகம் ஒன்றை வெளியிட்ட மிகவும் வயது குறைந்தவர் என்ற சாதனையை இலங்கையை சேர்ந்த சிறுவன் பெற்றிருந்தார்.

இந்த சாதனை ஏற்படுத்திய சிறுவனை ஜனாதிபதி, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று சந்தித்தார்.

சிறுவனின் திறமையை பாராட்டி ஜனாதிபதி அவருக்கு நினைவு சின்னம் ஒன்றையும் வழங்கினார். சிறுவனின் எதிர்கால கல்வி நடவடிக்கையில் வெற்றி பெற ஜனாதிபதி ஆசி வழங்கினார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தனுவன சேரசிங்க என்ற சிறுவன் Junk Food” என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

“Junk Food” என்ற ஆங்கில புத்தகத்தை எழுதும் போது அவரது வயது 4ம் 356 நாட்களுமாகும். இந்த புத்தகத்தை எழுதுவதற்கு அவருக்கு 3 நாட்கள் மாத்திரமே செலவாகியுள்ளது.

தனுவன சேரசிங்க தனது பெற்றோருடன் சீஷெல்ஸ் நாட்டின் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)