2018இல் புறப்பட்ட விமானம் 2017இல் தரையிறங்கியது!

ஹவாய் நாட்டின் விமானம் ஒன்று இந்த ஆண்டு பயணத்தை ஆரம்பித்து கடந்த ஆண்டு நிறைவு செய்த ஆச்சரியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த விடயம் தற்பொழுது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தவுடன் புறப்பட்ட விமானம் தரையிறங்கும்போது முந்திய ஆண்டான 2017 ஆம் ஆண்டிற்குள் சென்றுவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து சுவீடன் நாட்டின் விமான வழித்தட நிறுவனமான Flightradar24 தனது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளது.

2018இல் புறப்பட்ட விமானம் 2017இல் தரையிறங்கிய அதிசயம்: பயணிகள் அதிர்ச்சி!

ஹவாய் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான HA446 எனும் விமானம் நியூசிலாந்தின் அக்லாண்ட் நகரிலிருந்து 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அதிகாலை 12:05 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பயணமான குறித்த விமானம் 2017ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் நாள் காலை 9:45 மணிக்கு ஹவாயின் ஹொனலுலு நகரில் தரயிறங்கியது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஹவாய் எயார்லைன்ஸ் நிறுவனம், தாம் இவ்வாறு நடக்கும் என எதிர்பார்க்கவில்லை எனவும், டிசம்பர் 31 அன்று இரவு 11:55க்கு புறப்படவிருந்த விமானமே பத்து நிமிட தாமதத்தின்பின்னர் புறப்பட நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் தமது விமானத்தின் பயணிகள் இரண்டு புத்தாண்டுகளைக் கொண்டாடிய அனுபவத்தைப் பெற்றதாக மேற்படி விமான நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பூமியின் கிழக்கு-மேற்கு நெட்டாங்கு நேர வலயத்தின் பிரிப்பினால் ஹவாய் நாட்டிற்கும் நியூஸிலாந்து நாட்டிற்குமிடையில் பாரிய நேர வேறுபாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

2018இல் புறப்பட்ட விமானம் 2017இல் தரையிறங்கிய அதிசயம்: பயணிகள் அதிர்ச்சி!