சிகிச்சை பலனின்றி கர்ப்பிணி பெண் மரணம்!

pregnant-women-600-23-1479898440பிரான்ஸில் கர்ப்பிணி பெண் ஒருவர் குளியல் அறையில் பிணமாக கிடந்துள்ளமை அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் பகுதியில் வசித்து வந்த 21 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய கணவர் கதவை தட்டியும் கதவை திறக்காததால் கதவை உடைத்த உள்ளே சென்று பார்த்தபோது அவரது மனைவி குளியல் அறையில் மயக்கம் அடைந்து கிடந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த கணவன் உடனடியாக தனது மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் சிகிச்சை பலன் இன்னறி பெண்ணும் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிசார் தெரிவிக்கையில் அப்பெண் மயங்கி கிடந்த இடத்திற்கு அருகில் அவருடைய கைத்தொலைபேசி சார்ஜ்ஜிங் நிலையில் இருந்ததாகவும் அப்போது மின்சாரம் தாக்கி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதேபோல் கடந்த வருமட ஜூலை மாதம் குளியல் அறையில் தொலைபேசி பயன்படுத்திய போது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரழந்தமை குறிப்பிடத்தக்கது.