நாம் அடிக்கடி ஒரு பொருட்களை வாங்கும்போது அதன் சுவையை பார்த்தே வாங்க நினைப்பதுண்டு. ஆனால் அந்த உண்வு பொருட்களில் சேர்க்கப்படும் நச்சுத்தன்மையால் வரும் பாதிப்பை அறியாமல் இருப்போம். பல தயாரிப்புகள் தடை செய்தும் பல நாடுகளில் சந்தையில் இருக்கும் பொருட்களை காண்போம்.
கிண்டர் சர்ப்ரைஸ்
அமெரிக்காவில் அதிகளவில் ரசித்து வாங்கப்பட்ட கிண்டர் சர்ப்ரைஸ் 1938 ல் தடை செய்யப்பட்டது. அதனுள் வைத்திருக்கும் சாக்லேட்டில் உள்ளே பதிக்கப்பட்ட பொம்மை குழந்தைகளுக்கு ஒருவகையில் ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன் இதன் தயாரிப்பு அமெரிக்க சந்தையில் திரும்பவும் வந்துள்ளது.
செயற்கை சாயங்கள்
கடந்த 50 ஆண்டுகளில் ரசாயன சாயங்களால் தயாரிக்கப்படும் இனிப்பு மிட்டாய்கள் 500 % ஆக அதிகரித்துள்ளது. கூடுதலான ரசாயனத்தால் அலர்ஜி அல்லது புற்றுநோய் வருவதற்கான காரணமாக இது இருக்கிறது.
ஆண்டிபயாடிக் சிக்கன்
அமெரிக்காவின் மிகப்பெரிய இறைச்சி நிறுவனமான Tyson Foods நிறுவனம் ஐரோப்பா, ரஷ்யா, நோர்வே மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தங்கள் விநியோகத்தை தடை செய்துள்ளது. நுண்ணுயிர் எதிப்புகள், ஊக்க மருந்துகள், கோபமூட்டும் போதைப் பொருட்கள் ஆகியவற்றை கோழிக்குள் செலுத்துவதை கண்டுபிடித்துள்ளனர். மீண்டும் இந்நிறுவன தயாரிப்பு பொருட்கள் இந்த ஆண்டுகளில் வரலாம்.
GMO Foods மரபணு மாற்றப்பட்ட உணவு
மரபணு மாற்றப்பட்ட உணவுகளில் நச்சுத்தன்மை, ஊட்டச்சத்து குறைவு போன்ற காரணங்களால் தடை செய்யப்பட்டது. காய்கறிகள், பழங்களில் சேர்க்கப்படும் இவை தற்போது விலங்கு இறைச்சிகளிலும் சேர்க்கப்படுகிறது. ஆனால் தடைமீறி விற்பனையில் உள்ளது.
பேக்கிங் பவுடர்
பொட்டாசியம் புரோமைட் என்ற வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட பேக்கிங் பவுடர்கள் ரொட்டி, பண் போன்ற மாவு பொருட்களில் சேர்க்கப்டுகிறது. இதனால் தலைவலி, தோல் தடிப்பாவது, செரிமான கோளாருகள் போன்ற பிரச்சனைகளால் சீனா, கனடா மற்றும் ஐரோப்பா நாடுகளில் தடை செய்யப்பட்டு சந்தையில் இன்னும் வி்ற்கப்படுகிறது.
சால்மன் வளர்ப்பு மீன்கள்
சால்மன் வளர்ப்புகள் ஆவுஸ்ரேலியா மற்றும் நியூஸ்லாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது. சால்மன் வளர்ப்பு மீன்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் கலோரிசிட்டி அதிகமாக சேர்ப்பதால் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கொழுப்பு மாற்றி
ஒலெஸ்டா என்ற செயற்கை கொழுப்பு மாற்றிகள் மூலம் கலோரிகள் இல்லாமல் செய்துவிடும். இதல் சேர்க்கப்படும் ’லைட்’ என்ற வார்த்தையால் குறிப்பிடப்படும் உருளை கிழங்கு சிப்ஸ்சில் ரசாயனம் சேர்ப்பதால் வைட்டமின்கள் உறிஞ்சப்படுகிறது. இவை கனடா மற்றும் ஐரோப்பா நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு பானங்கள்
ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் விளையாட்டு பானங்களில் சேர்க்கப்படும் நச்சுத்தன்மையால் தடை செய்யப்பட்டுள்ளது. விதவிதமாக நிறங்களில் தயாரிக்கப்படும் இப்பானங்கள் தாவர எண்ணெய், காய்கறிகளின் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
பால்
பசுக்களுக்கு ஹார்மோன்கள் அதிகமாக செலுத்தி பால் உற்பத்தியை அதிகமாக்க பல்வேறு முறைகள் கையாளப்படும். இதனால் இதயநோய், தைராய்டு பிரச்சனையை உண்டுபண்ணும். நோர்வே, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, ஜப்பான் அவுஸ்திரேலியா மற்றும் 29 ஐரோப்பா நாடுகளில் தடை செய்யப்படுள்ளது.













