ரஷ்ய மருத்துவமனை ஒன்றில் உயிருக்கு போராடும் நோயாளி ஒருவரின் அருகில் நின்று அவரை கேலி செய்யும் வகையில் புகைப்படம் எடுத்த செவிலியர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
குறித்த செவிலியர், உயிருக்கு போராடும் நோயாளிகளை நாங்கள் படுக்கையுடன் சேர்ந்து பிணைத்து வைப்போம் என கூறியது சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவிலியர்கள் ஆதரவற்ற நோயாளிகளிடம் எவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்பதற்கு இது ஒரு சான்று என பொதுமக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அன்னா கிம் என்ற அந்த செவிலியர் ரஷ்ய தீவு ஒன்றில் அமைந்துள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். செவிலியர்களின் உதவி கட்டாயம் தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே தாங்கள் உதவி செய்ய முடியும் எனக் கூறும் அவர்,

சில வயது முதிர்ந்த நோயாளிகள் தங்கள் சுய நினைவை இழந்து செயல்படுவார்கள், அவர்களை நாங்கள் படுக்கையுடன் இணைத்து பிணைத்து வைப்போம் என பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் செவிலியர் அன்னா கிம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலான நிலையிலும் இதுவரை அவர் மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்கு அதி முக்கியத்துவம் வழங்கப்படும் என அந்த நாட்டின் ஜனாதிபதி புடின் முழக்கமிட்டு வரும் நிலையில்,
ஆதரவற்ற நோயாளிகளுக்கு உரிய மருத்துவ சேவை வழங்குவதில் செவிலியர்களும் மருத்துவர்களும் மெத்தனப்போக்கையே கடைபிடித்து வருவது வருத்தமளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.











