திடீரென ஏற்பட்ட மாற்றம்! கவலையில் இலங்கையர்கள்..

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் முதல் முறையாக வட் வரி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

VAT-525x330அதற்கமைய பெரும்பான்மை பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5 வீத வட் வரி அறவிடப்படவுள்ளது.

வரி அற்ற வாழ்க்கையை வழங்கியதன் ஊடாக, வளைக்குடா நாடுகள் நீண்ட காலமாக வெளிநாட்டு பணியாளர்களின் ஈர்ப்பினை பெற்றிருந்தன.

இந்நிலையில், கச்சா எண்ணெயின் விலை குறைந்தமையினால் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான அவசியம் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதற்கமைய 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து குறித்த இரண்டு நாடுகளிலும் வட் வரி அமுல்படுத்தப்படவுள்ளது.

வட் வரி அறிமுகப்படுத்தி வைப்பதன் பின்னர் 1,200 கோடி டிராம் வருமானம் கிடைக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கணித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல், உணவு, உடை, மின்சாரம், நீர் மற்றும் ஹோட்டல் அறைகளுக்காக இந்த வட் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இரண்டு நாடுகளும் தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வளைக்குடா நாடுகளின் ஏனைய உறுப்பு நாடுகளான பஹ்ரேன், குவைத், ஓமான் மற்றும் கட்டாரும் வட் வரியை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தி வைக்கும் வரியினால் சவூதியில் சேவை செய்யும் இலங்கையர்கள் வருத்தத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.