கிரிக்கெட் விளையாட கத்தி, பொல்லுகள், கோடரிகளுடன் ஆதிவாசிகள்!!

வரலாற்றில் முதன்முறையாக வவுனியாவில் ஆரம்பமாகியுள்ள ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக ஆவலுடன் மக்கள் திரண்டுள்ளனர்.குறித்த போட்டி வவுனியா – யங்ஸ்டார் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.இந்த போட்டியில், ஆதிவாசிகளின் கிரிக்கெட் குழு தலைவராக ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா களமிறங்கியுள்ளார்.இவர்களுடன் மோதுவதற்கு, வவுனியா மாவட்ட இளைஞர்கள் குழு, பொலிஸ் குழு, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் குழு மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாaளர்கள் குழு என்பன களமிறங்கியுள்ளன.இதில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன், உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிய ஸ்ரீ பெர்ணான்டோ, வவுனியா பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி மஹிந்தவில்லு ஆராய்ச்சி மற்றும் ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.